முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > இரயில்வே நிதி நிலை: பயண, சரக்குக் கட்டணங்களில் மாற்றமில்லை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இரயில்வே நிதி நிலை: பயண, சரக்குக் கட்டணங்களில் மாற்றமில்லை!
2009-10ஆம் நிதியாண்டிற்கான இரயில்வே நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்த இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, தற்பொழுதுள்ள பயண, சரக்குக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று இரயில்வே நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மம்தா பானர்ஜி, இஸ்ஸாட் என்ற திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.1,500க்கும் குறைவாக வருவாய் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 100 கி.மீ. வரையிலான இரயில் பயணம் செய்து திரும்புவதற்கான மாதாந்திர பயணச் சீட்டு ரூ.25க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

12 நிற்காமல் செல்லும் இரயில்கள் அறிமுகம்!

சென்னையில் இருந்து டெல்லிக்கும், கொல்கட்டாவின் ஹெளராவில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கும், மும்பையிலிருந்து டெல்லிக்கும் என நாட்டின் 12 நீண்ட தூர பயணத் தடங்களில் நிற்காமல் செல்லும் 12 இரயில்கள் விடப்படும் என்று மம்தா அறிவித்தார். புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை நிற்காமல் செல்லும் நீண்ட தூர இரயில்கள் விடப்படுவது இரயில்வே வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் உள்ள குறுகிய இரயில் பாதைகளை அகண்ட இரயில் பாதையாக்கும் திட்டத்திற்கு ரூ.1,700 கோடியும், புதிய இரயில் பாதைகளை அமைக்க ரூ.2,921 கோடியும் (இதற்காக இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைய சமூதாயத்தினருக்கும் ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 1,500 கி.மீ. தூரம் வரையிலான பயணத்திற்கு ரூ.299க்கு சலுகையில் பயணச் சீட்டு வழங்கப்படும்.

இதற்குமேல் புதிய இரயில்வே திட்டங்கள் அனைத்தும் இரயில்வே - தனியார் கூட்டாண்மையுடன்தான் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த மம்தா பானர்ஜி, இரயில்வேயின் சரக்கு கையாளல் இலக்கு இந்த நிதியாண்டிற்கு 882 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்தி நிர்ணயிக்கப்படுவதாக கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பாதுகாப்பே ரயில்வேயின் முன்னுரிமை - மம்தா பானர்ஜி
ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி: ஆய்வு செய்ய குழு
ரயில் நிலையங்களில் வணிகவளாகம்
2009-10 ‌நி‌தியா‌ண்டி‌ற்கான ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌றி‌‌க்கை
ரயில்வே பட்ஜெட்: 3ஆவது முறையாக மம்தா தாக்கல்
மைசூரில் வன்முறை: மேலும் இருவர் காயம்