ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நடப்பு நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்யும் 3ஆவது ரயில்வே பட்ஜெட் இதுவாகும்.
ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்த மம்தா பானர்ஜி, 2 ரயில்வே பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.
தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவர், இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் மக்களுக்கான ரயில்வே பட்ஜெட்டாக இருக்கும் என்று ஏற்கனவே மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|