முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மைசூரில் வன்முறை: மேலும் இருவர் காயம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மைசூரில் வன்முறை: மேலும் இருவர் காயம்
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உதயகிரியில் நேற்றிரவு நிகழ்ந்த வன்முறையில் 2 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முன்னதாக உதயகிரிக்கு அருகேயுள்ள மசூதி சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலிலை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்றிரவு அப்பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்தது. 2 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உதயகிரி பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட் இ‌ன்று தா‌க்க‌ல்
ஜார்க்கண்‌டி‌ல் குடியரசு தலைவ‌ர் ஆட்சி நீட்டிப்பு
பாக். சிறைகளில் 700 இந்தியர்கள்
ஓரினச்சேர்க்கை தீர்ப்பை ஆய்வு செய்த பின்னரே முடிவு- மொய்லி
ஜார்க்கண்ட்: குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும்
மைசூர் அருகே கோஷ்டி மோதல்: 3 பேர் பலி