ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசில் பணியாற்றும் மகளிருக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறையை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் பணியாளர் நலன், ஓய்வூதியத் துறைக்கான இணையமைச்சர் பிருத்வி ராஜ் சவான் இதனைத் தெரிவித்தார்.
பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையை அளிக்க அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.
|