முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > லிபரான் அறிக்கையை தாக்கல் செய்ய கல்யாண் சிங் கோரிக்கை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
லிபரான் அறிக்கையை தாக்கல் செய்ய கல்யாண் சிங் கோரிக்கை
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய லிபரான் ஆணையத்தின் அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபரான் ஆணைய அறிக்கையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.

லிபரான் ஆணையம் சுமார் 16 ஆண்டுகள் கழித்து தாமதமாக தனது அறிக்கையை அளித்துள்ளதால், மத்திய அரசு அதனை மேலும் தாமதப்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கல்யாண் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

லிபரான் ஆணைய அறிக்கை குறித்த விவாதத்திற்கு தாம் தயார் என்றும் அவர் கூறினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்யாண் சிங் ஆட்சி கலைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத்தொடரிலேயே லிபரான் அறிக்கையை தாக்கல் செய்வது குறித்து அரசு இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கற்பழிப்பு வழக்கு: நடிகர் அகுஜா காவல் நீட்டிப்பு
சுற்றுலா தலங்களாக பி.எஸ்.பி. நினைவிடங்கள் - மாயாவதி
கால்நடைத் தீவன ஊழல்: 16 பேருக்கு தண்டனை
கடல் பாலத்திற்கு ராஜிவ்காந்தி பெயர்: சரத் பவாருக்கு பால் தாக்கரே கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மக்களவை 15 நிமிடங்கள் தள்ளிவைப்பு
பிரபல ஓவியர் தயிப் மேத்தா மரணம்