முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > சுற்றுலா தலங்களாக பி.எஸ்.பி. நினைவிடங்கள் - மாயாவதி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சுற்றுலா தலங்களாக பி.எஸ்.பி. நினைவிடங்கள் - மாயாவதி
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் நினைவுச் சின்னங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த 6 மாத காலத்திற்குள் திறந்து விடப்படும் என்று அம்மாநில முதல்வர் மாயாவதி கூறியிருக்கிறார்.

லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பி.எஸ்.பி-யின் பூங்காக்களை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நாடுதழுவிய பிரசாரத்தை உத்தரப்பிரதேச அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.

இந்த நினைவுப் பூங்காக்களில், மாயாவதியின் சிலை, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும், பி.எஸ்.பி-யின் சின்னமான யானை சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நினைவுச் சின்னங்கள் என்று தாம் கூறியதை எதிர்க்கட்சிகள் தவறாகப் புரிந்து கொண்டதாகக் கூறிய அவர், இதுபோன்ற நினைவிடங்கள் அமைக்க மாநில சட்டசபையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கால்நடைத் தீவன ஊழல்: 16 பேருக்கு தண்டனை
கடல் பாலத்திற்கு ராஜிவ்காந்தி பெயர்: சரத் பவாருக்கு பால் தாக்கரே கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மக்களவை 15 நிமிடங்கள் தள்ளிவைப்பு
பிரபல ஓவியர் தயிப் மேத்தா மரணம்
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல: டெல்லி உய‌ர் நீதிமன்றம் தீர்ப்பு
ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர் ‌‌தி‌ட்ட பிர‌ச்சனையை பே‌சி ‌தீ‌ர்‌ப்போ‌ம்: எடியூர‌ப்பா