முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > இல‌ங்கை ‌பிர‌ச்சனை: நாளை கொழு‌ம்பு செ‌ல்‌‌கிறா‌ர் சிவசங்கர் மேனன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இல‌ங்கை ‌பிர‌ச்சனை: நாளை கொழு‌ம்பு செ‌ல்‌‌கிறா‌ர் சிவசங்கர் மேனன்
இரண்டு நாள் பயணமாக நாளை கொழும்பு செ‌ல்லு‌ம் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்க‌ர் மேனன், அ‌ங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று, தமிழக தலைவர்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள். இலங்கை‌த் தமிழர் பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று, மத்திய அரசும் கருத்து தெரிவித்து இருந்தது.

தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, அயலுறவு அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து இருந்தார். ஆனால், அவருடைய இலங்கை பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், அயலுறவு‌த்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், கொழு‌ம்பு செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அவர், நாளை (15ஆ‌ம் தே‌தி) இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். இலங்கையின் அயலுறவு அமை‌ச்ச‌ர் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களுடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் பேச்சு நடத்துகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத‌னிடையே இரு நாடுகளிடையேயான முக்கிய பிரச்னைகள் குறித்து மேனன் விவாதிக்க உள்ளதாக இந்திய தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து‌ள்ளா‌ர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் தீவிர சண்டை நடத்தி வருகிறது. கடைசி கட்டமாக முல்லைத்தீவை மீட்க ராணுவம் போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அயலுறவுத்துறை செயலரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மார்க்சிஸ்ட் கட்சியில் கோரப்போவதில்லை - சோம்நாத்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் வியாழன் குறைக்கப்படும்!
சிபுசோரனுக்கு நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி
பிரிட்டன் அயலுறவு அமைச்சர் வருகை
சபரிமலையில் 14ஆம் தேதி மகர ஜோதி
டெல்லியில் கடும் மூடுபனி; விமானங்கள் தாமதம்