முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பெட்ரோல், கேஸ் விலை குறைப்பு 10 நாளில் அறிவிக்கப்படும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெட்ரோல், கேஸ் விலை குறைப்பு 10 நாளில் அறிவிக்கப்படும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு அடுத்த 10 நாட்களில் வெளியிடப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தின்ஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகுறைப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

விலை குறைப்பு குறித்து நிதியமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு வெளியிடப்படும் என்றும், கண்டிப்பாக விலை குறைப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நடுத்தர மக்கள், விவசாயிகள், இந்த விலை குறைப்பு மூலம் நிவாரணம் பெறுவார்கள் என்று கூறிய தின்ஷா பட்டேல், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விலை குறைப்பு எவ்வளவு என்பது பற்றி விவாதித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
2020இல் நிலவிற்கு மனிதன் - அண்ணாதுரை
பிரதமரைச் சந்தித்தார் ஹமீது கர்சாய்
எண்ணெய் வளங்கள் பயங்கரவாதத்தின் இலக்காகலாம்: பிரணாப் எச்சரிக்கை
பதவி விலகினார் சிபுசோரன்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - ரமேஷ் அகர்வால்
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் பாலு அழைப்பு