முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > எண்ணெய் வளங்கள் பயங்கரவாதத்தின் இலக்காகலாம்: பிரணாப் எச்சரிக்கை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எண்ணெய் வளங்கள் பயங்கரவாதத்தின் இலக்காகலாம்: பிரணாப் எச்சரிக்கை
மும்பைத் தாக்குதல் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதம் என்று கூறியுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நமது நாட்டின் எண்ணெய் வளங்கள் அரசு அல்லது அரசு சாரா அமைப்புகளின் தாக்குதலிற்கு உட்படும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த பெட்ரோலிய தொழில்நுட்ப மாநாட்டைத் துவக்கிவைத்து உரையாற்றிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “சமீபத்தில் மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்டதாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பதே இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத தாக்குதல்களில் ஈடுபடும் அரசோ அல்லது அரசு சாரா அமைப்புகளின் நோக்கம் என்பதே மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்” என்று கூறினார்.
அதிலும் குறிப்பாக எண்ணெய் வளங்கள் அப்படிப்பட்ட தாக்குதல்களின் முக்கிய இலக்காக இருக்கும் என்று எச்சரிக்கை செய்த அமைச்சர் பிரணாப், அவைகளைக் காப்பதே ஒவ்வொரு அரசின் தலையாய சட்டப் பிரச்சனையாக இருக்கும் என்று கூறினார்.

எண்ணெய் வள சொத்துக்கள் மட்டுமின்றி, எண்ணெய் கொண்டு செல்லும் தடங்களைக் காப்பதில் சர்வதேச சமூகத்தி்ன் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் கூறிய பிரணாப் முகர்ஜி, அப்படிப்பட்ட ஒத்துழைப்பின் மூலம்தான் எண்ணெய் உற்பத்தி, வழங்கல், புதிய உற்பத்திக் கட்டமைப்புகளை உருவாக்குதல், அவைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பதவி விலகினார் சிபுசோரன்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - ரமேஷ் அகர்வால்
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் பாலு அழைப்பு
செய்தி உலகத்தில் ஒரு புத்துணர்வுக் காற்று!
3‌ஜி அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் : ஆ. ராசா
அய‌ல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள்