முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > காஷ்மீரில் 5வது நாளாக துப்பாக்கிச் சண்டை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காஷ்மீரில் 5வது நாளாக துப்பாக்கிச் சண்டை
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5வது நாளாக இன்றும் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் பகுதியில் ஜெய்ஷ்-ஈ-முகமது மற்றும் லஷ்கர்-ஈ-தயீபா ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவம் தேடுதல் நடவடிக்கையைத் துவங்கியது.

மெந்தார் பகுதியிலுள்ள படி-டார் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் துவங்கியதால், படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இன்று 5வது நாளாக தொடர்ந்து சண்டை நீடிக்கிறது. இச்சண்டையில் இதுவரை 4 தீவிரவாதிகள் மற்றும் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உயர் ராணுவ அதிகாரிகளும், காவல்துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டு நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மும்பை தாக்குதல்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளித்தது இந்தியா
கடுங்குளிருக்கு 52 பேர் உயிரிழப்பு
பாக். பெரிய விலையை கொடுக்க நேரிடும்- ப. சிதம்பரம்
முதல்வர்களுடன் ‌பிரதம‌ர் ஆலோசனை
இ‌ந்‌தியா ஐ.நா. பாதுகா‌ப்பு க‌வு‌ன்‌சிலை அணுகவே‌ண்டு‌ம் : கார‌த்
பய‌ங்கரவாத முகா‌ம்களை அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கலா‌ம்