முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > டெ‌ல்‌‌லி : க‌ர்நாடகா விரைவு ர‌யி‌‌லி‌ல் ‌தீ‌விப‌த்து!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டெ‌ல்‌‌லி : க‌ர்நாடகா விரைவு ர‌யி‌‌லி‌ல் ‌தீ‌விப‌த்து!
டெல்லி ரயில் நிலையத்தில் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த கர்நாடகா ‌விரைவு ரயிலில் ‌திடீ‌ர் தீ விபத்து ஏ‌ற்‌ப‌ட்டது. ர‌யிலு‌க்கு‌ள் ப‌‌ய‌ணிக‌ள் யாரு‌ம் இ‌ல்லாததா‌ல் உ‌யி‌ர்‌ச்சேத‌ம் த‌வி‌‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து டெல்லி வ‌ந்த கர்நாடக ‌விரைவு ரயி‌‌‌ல் டெ‌ல்‌லி ர‌யி‌ல் நிலையத்தின் யார்டு பகுதியில் நிறுத்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ர‌யி‌லின் 2 பெ‌ட்டிக‌ளி‌ல் இ‌ன்று ‌பி‌ற்க‌ல் 3.45 ம‌ணி‌க்கு ‌திடீரென ‌தீ ‌பிடி‌த்தது.

இதையடு‌த்து இது கு‌றி‌த்து ‌தீயணை‌ப்பு படை‌யினரு‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. 7 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்த அவ‌ர்க‌ள் சுமார் 15 ‌நி‌மிட‌த்து‌க்கு‌ப் பிறகு தீயை முற்றிலுமாக அணை‌த்தன‌ர். ரயிலுக்குள் யாரும் இல்லாததா‌ல் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இ‌ந்த க‌ர்நாடகா ‌விரைவு ர‌யி‌ல் மறுமா‌ர்‌க்கமாக மீண்டும் இ‌ன்று இரவு 9.15 மணிக்கு டெல்லியில் இருந்து புற‌ப்ப‌ட்டு கர்நாடகாவு‌க்கு‌ச் செ‌ல்ல வே‌‌ண்டு‌ம்.

இ‌தை‌த்தொட‌ர்‌ந்து, தீ ‌விப‌த்து‌ ஏ‌ற்ப‌ட்டது கு‌றி‌த்து ர‌யி‌ல்வே உய‌ர் அ‌திகா‌ரிக‌ள் ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு
ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!
த‌மிழக‌த்‌‌தி‌ல் 13 உ‌ள்பட 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி!
பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!
வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் கேரள முத‌ல்வ‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பெருமளவு வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌‌ல்!