முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று தொலைபேசியில் பேசிய ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை ஆமோதித்ததுடன், அதற்கான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. உதவிடும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐ.நா தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமரை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பான்-கி-மூன், மும்பை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த உரையாடலின் போது, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்களையும், அதற்கு துணை நின்றவர்களையும் சட்டத்தின் முன்பு நிறுத்துவது கடினமான பணி என்றாலும், அதனை நிறைவேற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மும்பை தாக்குதலின் போது இந்திய மக்களின் தைரியமும், அத்தாக்குதலில் இருந்து மீளும் தன்மையும் பாராட்டக் கூடிய வகையில் இருந்ததாகவும் பான்-கி-மூன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!
த‌மிழக‌த்‌‌தி‌ல் 13 உ‌ள்பட 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி!
பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!
வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் கேரள முத‌ல்வ‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பெருமளவு வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌‌ல்!
மும்பை தாக்குதலில் பாக்.கிற்கு தொடர்பு: ரைஸிடம் ஆதாரங்களை காட்ட இந்தியா திட்டம்