முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > உ‌யி‌ர் த‌ப்‌பிய பெ‌ண் ஊ‌ழிய‌‌ரி‌ன் சோக‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உ‌யி‌ர் த‌ப்‌பிய பெ‌ண் ஊ‌ழிய‌‌ரி‌ன் சோக‌ம்
தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து உயிருடன் தப்பிய 23 வயதான ஃப்ளோரன்ஸ் என்ற பெண் தனது தந்தையை இழந்த சோகத்தில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை.

தானேயில் வசிக்கும் ஃப்ளோரன்ஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டலில் வரவேற்பறையில் பணியாற்றி வந்தார். அவரது 50 வயதான தந்தை மார்டிஸ் அதே ஹோட்டலில் ஊழியராக பணியாற்றினார்.

கடந்த புதன்கிழமை இரவு தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளிடம் தாஜ் ஊழியர்கள் மற்றும் விடுதியில் தங்கியவர்களுடன் தந்தை, மகள் இருவருமே பிணையக் கைதிகளாக பிடிபட்டனர். தந்தை தரை தலத்திலும், மகள் இரண்டாவது மாடியிலும் பயங்வராதிகளின் பிடியில் இருந்துள்ளனர்.

நவம்பர் 26ம் தேதி ஃப்ளோரன்ஸ் தனது சகோதரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதேப்போல மார்டிசும் வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு தனது மனைவியிடம் பேசியுள்ளார்.

பின்னர் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மீட்பு முயற்சியில் ஃப்ளோரன்ஸ் மற்றும் சில ஊழியர்களும் ஹோட்டலில் இருந்து வெளியேறிவிட்டனர்.

ஃப்ளோரன்ஸ் தனது வீட்டிற்குச் சென்றபோதுதான், தனது தந்தை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்தார்.

மார்டிஸ் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் தனது மகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது மகளுக்கு ஆறுதலும், தைரியமும் அளித்துள்ளார்.

எனது தந்தை என்னிடம் தொலைபேசியில் பேசிய போது, எனக்கு மிகவும் பசிக்கிறது என்று கூறினேன். அவர் எனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வருவதாகக் கூறினார். ஒருவேளை எனக்கு உணவு கொண்டு வர முயற்சி செய்தபோது தான் அவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறிவிட்டு கதறி அழுதார்.

இதில் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டி இருக்கிறது, மார்டிஸ் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றுதான் அவருடைய திருமண நாளாகும்.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
காஷ்மீரில் தேர்தல் : தலைவர்கள் ‌வீ‌ட்டு‌க்காவ‌ல்
பய‌ங்கரவா‌தி அஜ்மல் பா‌கி‌ஸ்தானை‌ச் சே‌ர்‌ந்தவ‌ன்
தேவாலயம் மீது குண்டு வீசிய வழ‌க்கு : 11 பேருக்கு தூ‌க்கு தண்டனை!
3 காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை கொ‌ன்றவ‌ன் : ‌பிடிப‌ட்ட தீவரவா‌தி கசா‌ப் வா‌க்குமூல‌ம்!
தாவூத்தை இ‌ந்‌தியா‌விட‌ம் ஒப்படைக்க பாகிஸ்தானு‌க்கு நெரு‌க்கடி கொடு‌க்க வே‌ண்டு‌ம்:அத்வானி!
ஜம்மு-காஷ்மீ‌‌ரி‌ல் இன்று 3ஆம் கட்டத் தேர்தல்!