முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹைட் சட்டம் கட்டுப்படுத்தாது: பிரணாப்!
இதையடு‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்ட இடதுசா‌ரி- ஐ.மு.கூ. உ‌ய‌ர்ம‌ட்ட‌க் குழு‌வி‌ன் மு‌க்‌கிய நோ‌க்கமே, ஹை‌ட் ச‌ட்டமு‌ம் 123 ஒ‌ப்ப‌ந்தமு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ன் அயலுறவு‌க் கொ‌ள்கைக‌ளி‌ல் ஏ‌ற்படு‌த்து‌ம் பா‌தி‌ப்புகளை‌ப்‌ ப‌ற்‌றி ‌விவா‌தி‌ப்பதுதா‌ன். உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ன் முடிவுகளை அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்து‌ம்போது கவன‌த்‌தி‌ல்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இடதுசா‌ரிகளுட‌ன் ம‌த்‌திய அரசு ஒ‌ன்பது கூ‌ட்ட‌ங்களை நட‌த்‌தியு‌ள்ளது. இ‌தி‌ல் ஆறு கூ‌ட்ட‌ங்க‌ள் சுமூகமாக முடி‌ந்தன. நவ‌ம்ப‌ர் 2007 முத‌ல்தா‌ன் ‌பிர‌ச்சனை ஆர‌ம்‌பி‌த்தது." எ‌ன்றா‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி.

இடதுசா‌ரிக‌ளி‌ன் மு‌க்‌கிய‌க் கோ‌ரி‌க்கைக‌ளாக ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தன வருமாறு:

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ஐ.ஏ.இ.ஏ. எ‌‌ன்னெ‌ன்ன ‌நிப‌ந்தனைக‌ளி‌ன் ‌கீ‌ழ் அ‌ங்‌கீக‌ரி‌க்கு‌ம்?

க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ன் ‌கீ‌ழ் கொ‌ண்டுவர‌ப்படு‌ம் அணு உலைக‌ளை ‌பி‌ரி‌த்தளிக்கும் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ஐ.ஏ.இ.ஏ. ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்கு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசா‌‌ல் உறு‌திய‌ளி‌க்க முடியுமா?

அணு உலைகளு‌க்கான எ‌ரிபொரு‌ள் ‌வழங்கலில் தடை ஏ‌ற்ப‌டு‌ம் சூ‌ழ்‌நிலை‌யி‌ல் ஐ.ஏ.இ.ஏ. உதவுமா?

ஐ.ஏ.இ.ஏ. உட‌ன் இறு‌தி செ‌ய்ய‌ப்பட உ‌ள்ள க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை பொது‌வி‌ல் வெ‌ளி‌யிடாதது ஏ‌ன்?

இவை அனை‌த்‌தி‌ற்‌கு‌ம் அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌நிறைவேறுகை‌யி‌ல் ப‌தில‌ளி‌க்‌கிறோ‌ம் எ‌‌ன்று நா‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்தோ‌ம். ரக‌சிய ஆவண‌ங்‌க‌‌ள் ஒ‌வ்வொரு நாடுக‌ளி‌லும் வெவ்வேறு விதமாகப் பா‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன. இ‌ந்‌தியா‌வி‌ற்கான க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை த‌ங்களது ஆளுந‌ர் குழு‌வி‌‌ற்கு‌ள் சு‌ற்று‌க்கு ‌விடுவத‌ற்கு மு‌ன்பு வெ‌‌ளி‌யிட வே‌ண்டா‌ம் எ‌ன்பது ஐ.ஏ.இ.ஏ.‌வி‌ன் ‌நிப‌ந்தனை. அத‌ன்படி ஒ‌ப்ப‌ந்த‌ம் சு‌ற்று‌‌‌க்கு ‌விட‌ப்ப‌ட்டது‌ம்தா‌ன் அதை வெ‌ளி‌யி‌ட்டோ‌ம் எ‌ன்றா‌ர் ‌பிரணா‌ப்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் இணைய த‌ள‌த்‌தி‌ல் க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் முத‌லி‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது எ‌ன்று எழு‌ந்த ச‌ர்‌ச்சை ப‌ற்‌றி அவ‌ர் கூறுகை‌யி‌ல், "ப‌ன்னா‌ட்டு அள‌வி‌ல் வேறுபடு‌ம் நேர‌‌‌த்தா‌ல் வ‌ந்த ‌சி‌க்க‌ல் அது. ம‌ற்றபடி இ‌‌ந்‌தியா‌விலு‌ம் அமெ‌ரி‌க்கா‌விலு‌ம் ஒரே நேர‌த்‌தி‌ல்தா‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம் வெளியிட‌ப்ப‌ட்டது" எ‌ன்றா‌ர்.
<< 1 | 2 
மேலும்
அணு ஆயுத‌ம் தயா‌ரி‌‌க்கு‌ம் வா‌ய்‌ப்பை ‌திற‌ந்தே வை‌த்து‌ள்ளோ‌ம்: ‌பிரணா‌ப்!
நம்பிக்கை வாக்கெடுப்பு: திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது!
ம‌த்‌திய அர‌சி‌ற்கு 276 எ‌ம்.‌பி.‌க்க‌‌ள் ஆதரவு: ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி!
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் இ‌‌ந்‌தியாவை அமெ‌ரி‌க்கா‌வி‌‌ன் கை‌‌ப்பாவையாக மா‌ற்று‌ம்: அ‌த்வா‌னி!
1998 அணு ஆ‌யுத சோதனையை எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!
'நா‌ன் தேச நல‌னி‌ற்கு‌த்தா‌ன் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்தே‌ன்': ‌பிரதம‌ர்!