முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை  Search similar articles
மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசுக்கு இடது சாரிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. மக்களவையில் நாளை மறுநாள் மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோம்நாத் சாட்டர்ஜி.

இந்த கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு, வாக்கெடுப்பின் போது கட்சிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் உட்பல பல்வேறு விஷயங்கள் பற்றி சோம்நாத் சாட்டர்ஜி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
நம்பிக்கை வாக்கெடுப்பு : கட்சிகளின் நிலை
எதிராக வாக்களிப்போம் - அசாம் கன பரிஷத்
காங்கிரஸ் அரசுக்கே வாக்களிப்போம் - பா.ம.க. நாடாளுமன்ற குழு தலைவர்
சமாஜ்வாடி கட்சியிலிருந்து சித்திக் விலகல்!
அணு சக்தி ஒப்பந்தம்: நமது உரிமைகள் உறுதிபடுத்தப்படவில்லை- விஞ்ஞானிகள்!
காஷ்மீரில் கண்ணிவெடித் தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 10 பேர் பலி!