முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இராமர் பாலமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!
சேது சமுத்திர கால்வாய் திட்டப்பகுதியில் உள்ள நிலத்திட்டுக்கள் இராமர் பாலம்தானா என்பதைக் கண்டறிய தொல்லியல் துறை ஆய்விற்கு உட்படுத்தி, அதனை புராதன சின்னமாக அறிவிக்கும் சாத்தியக் கூறு குறித்து மத்திய அரசு ஆலோசித்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

“சென்னை உயர் நீதிமன்றம் கூறியது போல அது இராமர் கட்டியதுதானா என்பதை தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு செய்து, அது உறுதியானால் அதனை புராதன சின்னமாக அறிவிப்பது குறித்த சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும்” என்று நீதிமன்றக் குழு கேட்டுக்கொண்டது.

இவ்வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்த உச்ச நீதிமன்ற அமர்வு, சேது சமுத்திரத் திட்டத்தை வேற்றுப் பாதையில் நிறைவேற்றும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்தும் ஆராயும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்
எ‌ய்‌ம்‌ஸ் இய‌க்குநராக ‌மீ‌ண்டு‌ம் பத‌வியே‌ற்றா‌ர் வேணுகோபா‌ல்!
அமை‌ச்ச‌‌ர் அ‌‌ன்பும‌ணியை‌ப் பத‌வி‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!
வை‌ஷ்ண‌வி கோ‌யி‌‌லி‌ல் ‌தீ ‌விப‌‌த்து!
ஓவியர் ஹுசைன் மீதான வழக்கு தள்ளுபடி!
எ‌ய்‌ம்‌ஸ் ச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌ம் செ‌ல்லாது: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!
பய‌ங்கரவாத‌த்தை ஒ‌‌ழி‌க்க ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்: இ‌ந்‌தியா!