முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காஷ்மீர் பேருந்து விபத்தில் 14 பேர் பலி!
ஸ்ரீநகர் அருகே பயணிகள் பேருந்து ஒன்று க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்து பள்ளத்தில் உருண்டதில் அதில் பயணம் செய்த 14 பேர் ப‌லியா‌யின‌ர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர்.

சுமார் 45 பயணிகளுடன் இந்த பேருந்து மோசமான மலைப் பாதையில் ஸ்ரீநகர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது பானிஹால் அருகே பள்ளத்தில் உருண்டு‌ள்ளது.

எனினும் இந்த விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை என்று‌ம், விசாரணைக்கு உத்தரவிட‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாகவு‌ம் காவ‌ல்துறை கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில மலைப் பகுதி சாலைகள் பராமரிப்பு ச‌ரி‌யி‌ல்லை எ‌ன்பதா‌ல் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
3.7 கோடி போலி ரேஷன் அட்டைகள் புழ‌க்க‌ம்- அரசு!
பாதுகா‌ப்பு, குடிமை‌ப் ப‌ணி அ‌திகா‌ரிகளு‌க்கு சலுகைக‌ள்: ‌பிரதம‌ர் உறு‌தி!
மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மே. வங்கத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து முழு அடைப்பு : இயல்புநிலை பாதிப்பு!
விலைவாசி உயர்வு: கடை அடைப்பு!
27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு!