முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முன்னாள் மத்திய அமைச்சர் மக்பூல் தார் காலமானார்!
முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் மொஹமத் மக்பூல் தார் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை‌யி‌ல் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 65.

இவருக்கு 2 மனைவிகளும் 5 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக ஷெர்-இ காஷ்மீர் மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அ‌ங்கு ‌சி‌‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி நேற்றிரவு அவ‌ர் காலமானார்.

காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஷாங்கஸ் என்ற இடத்தில் 1943ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் மக்பூல் தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பிறகு 1971ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.

1975ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 1987ல் தோல்வியுற்றார். அதன் பிறகு சுயேட்சையாக தேர்தலில் நின்றார்.

1996 ஆம் ஆண்டு ஜனதா தள வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தேவகவுடா தலைமையிலான அரசில் இவர் உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மேலும்
டெ‌ல்‌லி‌க்கு‌‌‌ப் பய‌ங்கரவா‌திக‌ள் கு‌றி: நாடாளும‌ன்ற‌க் குழு எ‌ச்ச‌ரி‌க்கை!
‌விலைவா‌சி: இர‌ட்டை வே‌ட‌‌மிடு‌ம் இடதுசா‌ரிக‌ள்- பா.ஜ.க. கு‌ற்ற‌ச்சா‌ற்று!
‌விலைவா‌சி உ‌ய‌ர்வு: ம‌த்‌திய அர‌சி‌ன் ‌மீது இடதுசா‌ரிக‌ள் பா‌ய்‌ச்ச‌ல்!
குஜராத் பேருந்து விபத்து: 3 நபர் விசாரணைக் குழு!
டெ‌ல்‌லி‌யி‌ல் ‌சீன‌த் தூதரக‌‌த்தை தா‌க்க முய‌ற்‌சி: ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் கைது!
ம‌த்‌திய‌ப்‌ ‌பிரதேச‌த்‌தி‌ல் எரிமலை!