முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நர்மதா கால்வாயில் ‌பேருந்து கவிழ்ந்த‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு 42 ஆக உய‌ர்வு
குஜராத் மாநில‌ம் வதோதரஅருகநர்மதா கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உ‌யி‌ரிழ‌ந்த பள்ளி மாணவர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 42 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

வதோதராவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள போதே‌லி கிராமத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்தது.

இதுவரை பேருந்தஓட்டுனரஉள்பட 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், இதில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறுவர்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய் நெஹ‌்ரா தெரிவித்தார்.

மேலும், 4 சிறுவர்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கல்விச் சுற்றுலாவுக்காக 5 முதல் 11-ம் வகுப்பு வரையிலான 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தா‌‌ர்கோ‌ல் கிராமத்தில் இருந்து பொதே‌லிக்கு குஜராத் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தப் பேருந்து, பொதேலியில் பாலத்தைக் கடந்தபோது, நிலை தடுமாறி நர்மதா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்திலபயணமசெய்மாணவர்கள் 5 பேரதண்ணீரிலஇருந்தநீந்தி கரையேறி அருகிலஉள்கிராமத்தினரிடமவிபத்தகுறித்தகவலைததெரிவித்தனர்.

கா‌ல்வா‌யி‌ல் த‌ண்‌ணீ‌‌ர் வர‌த்து இரு‌ந்தா‌ல் ‌மீ‌ட்பு‌ப் ப‌ணிக‌ள் பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், இச‌ர்தா‌ர் சரோவா‌ர் அணை‌யி‌ல் இரு‌ந்து ‌திற‌ந்து‌விட‌ப்படு‌‌ம் த‌ண்‌ணீ‌ர் த‌ற்போது ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உ‌யி‌ரிழ‌ந்தோ‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ. 1 ல‌ட்ச‌ம் ந‌ஷ‌‌்ட ஈடு அ‌ளி‌க்குமாறு குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
மேலும்
குஜராத் : நர்மதா கால்வாயில் ‌பேருந்து கவிழ்ந்து மாணவர்கள் 15 பேர் பலி
ராமர் பாலத்தை யார் வழிபடுகிறார்கள் - உச்ச நீதிமன்றம் கேள்வி!
டெ‌ல்‌லி‌யி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் சுட‌ர் ஒ‌ட்ட‌ப் போரா‌ட்ட‌ம்!
இடஒதுக்கீடு : வருவாய் வரம்பை உயர்த்த வேண்டும் - திமுக!
‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து நாடாளும‌ன்ற வளாக‌த்‌தி‌ல் இடதுசா‌ரி- ஐ.தே.மு.கூ. போரா‌ட்ட‌ம்!
விலை உயர்வு: அமைச்சரவை குழுக் கூட்டம் தள்ளிவைப்பு!