முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலி‌ம்பிக் சுடர் ஓட்டம்- தலாய் லாமா வேண்டுகோள்!
தரம்சலா: இந்தியாவில் நடைபெறும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தி‌ன் போது அங்குள்ள திபெத்தியர்க‌ள் பிரச்சனைகள் ஏற்படுத்தவேண்டாம் என்று திபெத்திய பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரிஸ், லண்டன், சான்பிரான்ஸிஸ்கோவில் சீனாவின் திபெத் அடக்கு முறையை எதிர்த்து திபெத் ஆதரவாளர்கள் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்‌ப்பாட்டம் செய்தனர்.

இதனால் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமாறு நடந்துகொள்ளவேண்டாம் என்று தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவிற்கு செல்லும் வழியில் தற்போது அவர் ஜப்பானில் வந்திறங்கியுள்ளார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இவர் 5 நாள் ஆன்மீக கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றுகிறார்.
மேலும்
உத்தராகண்டில் பேருந்து விபத்து: 17 பேர் பலி
உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு பொருளாதார‌ வள‌ர்‌ச்‌சியை‌ப் பா‌தி‌க்கு‌ம்: ‌பிரதம‌ர்!
அ‌ஸ்ஸா‌ம் ச‌ந்தை‌யி‌ல் நட‌ந்த கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 40 பே‌ர் காய‌ம்!
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பு: கா‌ங்‌கிர‌ஸ், க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிக‌ள் வரவே‌ற்பு!
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பு: சு‌ப்‌பிரம‌ணிய சா‌மி வரவே‌ற்பு!
இட ஒது‌க்‌கீ‌ட்டி‌ல் ‌கி‌ரீ‌மி லேயரை ‌த‌வி‌ர்‌க்க‌‌க் கூடாது: பா‌ஸ்வா‌ன்!