நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » பாகிஸ்தானுக்கு ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை (Hilary Warns Pakistan)
FILE
தீவிரவாதிகளை ஆதரிக்காதீர்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் தீவிரவாதக் குழுக்களை ஆதரிக்காதீர்கள் என்றும அவர் பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் தீவிரவாதக் குழுக்கள் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளன என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாங்கள் கூறுகிறோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹக்கானி குழுவினரையோ அல்லது ஆப்கான் தாலிபான்களையும் இந்தியாவுக்கு எதிராக லஸ்கர்-இ-தொய்பா குழுவினரையும் ஆதரிக்காதீர்கள்.

அவர்கள் விஷப் பாம்புகளைப் போன்றவர்கள். அவர்களை உங்கள் பின்னே வைத்துக்கொண்டு, பக்கத்தில் உள்ள நாடுகளைத் தாக்காதீர்கள் என்று ஹிலாரி கிளிண்டன் தனியார் நிகழ்ச்சி ஒன்றின்போது கூறினார்.

பின் லேடனைக் கொன்றது, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அமெரிக்க-நேட்டோ படையினரால் தக்கபப்ட்டு கொல்லப்படும் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஹிலாரி கிளிண்டன் இந்த நிலையில் வெளிப்படையாக பாகிஸ்தானை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Feedback Print