பேஸ்புக் இணையதளத்தைப் பார்க்க மகள்களுக்குத் தடை விதித்த ஒபாமா

ஞாயிறு, 18 டிசம்பர் 2011 (12:21 IST)

தனது குடும்பத்தினரின் விவரங்களையும், அவர்களின் செயல்பாடுகள் குறித்து யாரும் அறிந்து கொள்ள தான் விரும்பவில்லை என்ற காரணத்தினால் அமெரிக்க அதிபர் ஒபாமா பேஸ்புக் இணையதளத்தை தனது மகள்கள் பார்க்கத் தடை விதித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 2008-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தனது தேர்தல் பிரசாரத்துக்கு ‘பேஸ்புக்’ இணைய தளத்தை பயன்படுத்தினார்.அதன் மூலம் பிரசாரம் செய்து மக்களை கவர்ந்த அவர் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் இணைய தளத்தில் பிரசாரம் செய்து அதிபரானவர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால் அவர் தனது மகள்கள் ‘பேஸ்புக்’ இணையதளத்தில் உறுப்பினராகி அதை பயன்படுத்த தடை விதித்துள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமா மூத்த மகள் மாலியா. அவருக்கு 13 வயது ஆகிறது. இளைய மகள் சாஷா. இவருக்கு 10 வயது ஆகிறது. பேஷ்புக் போன்ற இணைய தளங்களை பயன்படுத்தும் வயது பக்குவம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை. அத்துடன் தனது குடும்பத்தினரின் விவரங்களையும், அவர்களின் செயல்பாடுகள் குறித்து யாரும் அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் போன்ற சமூக இணைய தளத்தை பயன்படுத்தும் பக்குவம், வயது வராததால் இன்னும் 4 ஆண்டுகள் கழித்து அவர்கள் அதில் சேர்ந்து தங்களின் வெளியுலக தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று ஒபாமா கூறியுள்ளார்.

பேஸ்புக் இணைய தளத்தில் அதிபர் ஒபாமா உறுப்பினராக உள்ளார். அவரது பக்கத்தில் 2 கோடியே 40 லட்சம் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

உலக வங்கி தலைவர் வோல்ஃபோவிட்ஸ் பதவி விலகல்!

தனது காதலிக்கு அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் அதிகபட்ச ஊதியத்திற்கு பணியமர்த்தியது ...

நாடாளுமன்ற அவைகள் காலவரையின்றி தள்ளிவைப்பு!

பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் இயங்கவிடாமல் பா.ஜ.க. உள்ளிட்ட ...

ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடித்தது : 5 பேர் பலி! பலர் படுகாயம்!

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உலகப் புகழ்பெற்ற சார்மினார் அருகேயுள்ள பழமை வாய்ந்த மெக்கா ...

ராக்கிங் செய்தால் வழக்கு : உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனறு கல்வி ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

வாரணாசி கலாட்டா: நரேந்திர மோடியை எதிர்த்து ஒசாமா பின்லேடன் போட்டி

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை போலவே ...

தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மதுவிற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சித்திரை 1 ஆம் தேதி மட்டும் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று ...

ஆதாரமில்லாமல் அவிழ்த்து விடும் அரைவேக்காடு அரசியல்

நாடாளுமன்றத்தில் தனது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் எழுந்து சென்ற ராஜீவ் காந்தியை, "மிஸ்டர். ...

Widgets Magazine