புதுடெல்லி, திங்கள், 21 பிப்ரவரி 2011( 19:44 IST )
அதிபர் கடாபிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுக்கான லிபியா தூதர் அலி அல்-எஸ்ஸாவி, இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
லிபியாவில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை ஒடுக்க அதிபர் கடாபி வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்துள்ளார் என ராஜினாமா செய்துள்ள தூதர் அலி அல்-எஸ்ஸாவி குற்றம்சாட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனிடையே, சீனாவில் உள்ள லிபியா தூதரகத்தின் மூத்த அதிகாரி ஹூசைன் சாதிக் அல் முஸ்ரதி என்பவரும் அதிபர் கடாபிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.