தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » வவுனியாவில் தமிழ்ச் சிறுமிகள் இராணுவத்தினரால் கற்பழிப்பு
Bookmark and Share Feedback Print
 
வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர், தமிழ்ச் சிறுமிகள் பலரை கற்பழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

14, 15, மற்றும் 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் தாங்கள் கற்பழிக்கப்பட்டதை வவுனியா நீதிபதி முன் கடந்த அக்டோபர் மாதம் கூறியுள்ளனர்.

பல கற்பழிப்புகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும்,வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளது.

புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து வைத்துள்ள சிறைக்கு அனுப்புவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

பின்னர் அச்சிறுமி தடுப்பு முகாமுக்கு அனுப்பட்டார்.அந்த தடுப்பு முகாம்களில் உள்ள 17 மற்றும் 19 வயதான சிறுமிகளும் ராணுவ அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதத்தில் காயப்பட்ட பெண்கள் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அந்த பெண்களை சிங்கள ராணுவத்தினர் பார்க்க வேண்டும் என்பதற்காக, சிங்கள் தாதியர் அப்பெண்களை நிர்வாணமாக்கி ஹோஸ் பைப்புகளைப் பயன்படுத்தி குளிப்பாட்டியதாக நேரில் கண்ட சாட்சியின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமது கணவன்மாரை ராணுவம் எங்கே தடுத்து வைத்துள்ளார்கள் எனத் தெரியாமல் இன்னல் பட்டுக்கொண்டிருந்த பல பெண்களை, மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த உயர் பணியாளர் ஒருவர் தகாத முறையில் பயன்படுத்தியதாகவும் பல தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மே மாதத்தில் தடுப்பு முகாமுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட மூன்று தமிழ்ப்பெண்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையில் கையளிக்கப்பட்டன. அந்த உடல்களில் கடித்ததற்கான காயங்களும், பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகளும் இருந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர்.

அண்மையில் கற்பழிப்புகளை ராணுவம் ஒரு போர்த்தந்திரமாக பயன்படுத்துவதாக ஹிலாரி கிளின்டன் கூறியபோது, இலங்கை பிரதமர் அவர்மீது தனிப்பட்ட முறையில் எதிர்க்கருத்துக்கள் சில கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இது இலங்கை இராணுவத்தின் கடந்த கால செயற்பாடுகள் மட்டுமல்ல.லட்சக்கணக்கான தமிழர்களை ராணுவத்தில் பிடியில் வைக்க அனுமதித்துள்ளதால், சர்வதேச சமூகத்தாலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஒரு தொடர் குற்றச்செயல் எனக் கூறுகிறார் கற்பழிப்புகள் குறித்த செய்திகளைச் சேகரித்துவரும் தமிழர் ஒருவர்.

இந்த கற்பழிப்புகள் தடுப்பு முகாம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சிறிய ராணுவ முகாம்களை அமைப்பதன்மூலம் இதை மேலும் விஸ்தரித்து வருகிறது அரசாங்கம்.முறைப்பாடுகள் கொடுத்த தமிழர்களுக்குக் கூட நீதிகிடைக்க ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சர்வதேச சமூகமும், ஐ.நா.வும் மவுனமாக இருப்பதாலேயே ஈழத் தமிழர்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

இந்நிலையில், சிங்கள இராணுவத்தின் இந்த கொடூரங்களை தோலுரித்துக்காட்டுவதற்கான சான்றுகள் நிரூபிக்கப்பட்டால் சர்வதேச சமூகம், சரியான நடவடிக்கை எடுத்து தமது நற்பெயரை நிலைநாட்டுமா என வன்னியில் உள்ள மனிதாபிமானப் பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்