தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » ஜன. 23 ல் இலங்கை அதிபர் தேர்தல்
Feedback Print Bookmark and Share
 
இலங்கை நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு முன்னர், வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அதிபர் தேர்தலை நடத்துவது என தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கட்சி உறுப்பினர்களையும் அவர் பணித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக உதவி இலங்கை தேர்தல் ஆணைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தேர்தல் குறித்த அறிவிப்பை ராஜபக்ச இன்று நள்ளிரவில் வெளியிடலாம் என்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்