இந்தோனேஷியாவில் 200 க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற படகு ஒன்று, சுமத்ரா தீவு அருகே கடலில் மூழ்கியது.
இந்தோனேஷியாவின் பட்டாம் தீவில் இருந்து 213 பயணிகள் மற்றும் 13 சிப்பந்திகளுடன் ஏற்றிக்கொண்டு ஒரு படகு ரியு மாகாணத்தில் உள்ள பெகான்பாரு என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.
சுமத்ரா தீவு அருகே கரிமுன் தீவு வழியாக அந்த படகு சென்றபோது மோசமான சீதோஷ்ண நிலை மற்றும் அங்கு பெய்த பலத்த மழையால் அலைகள் சீறி எழுந்தன.
இதில் சிக்கி அந்த படகு மூழ்கியது.படகில் இருந்த அனைவரும் மூழ்கினார்கள்.
பலத்த மழை மற்றும் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினரால் அவர்களை மீட்க முடியவில்லை.
இதனால் அந்த படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.