தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » கிழக்கு இலங்கையில் லக் ஷர் - இ - தொய்பா ?
Feedback Print Bookmark and Share
 
இலங்கை கிழக்குப்பகுதியில் சர்வதேசநாடுகளிலும், இந்தியாவிலும் இயங்கும் லக் ஷர் - இ - தொய்பா தீவிரவாத இயக்கம் இயங்கிவருவதாகவதாக செய்தி வெளியாகி உள்ளது.

1990 களில் இருந்து செயற்படும் இவ் அமைப்பு பொஸ்னியா மத்திய ஆசிய குடியரசு செச்சினியா மற்றும் டயிகிஸ்டானில் இதுவரை இயங்கி வந்துள்ளதாகவும், சிலகாலத்துக்கு முன்னார் இது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இயங்கி வருவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு வேறு சில ஆயுதக குழுக்களை ஊடக்குவித்து வந்ததும், அதில் பல தமிழ் மற்றும் முஸ்லீம் குழுக்கள் இடம் பெற்றிருந்ததாக முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தியாவில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் இவ் அமைப்பு தொடர்பு கொண்டுள்ளதையும் மற்றும் இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாஜ் விடுதித் தாக்குதலிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்