வன்னி முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில் ராஜபக்சே அறிவிப்பு
கொழும்பு, சனி, 21 நவம்பர் 2009( 15:45 IST )
முகாம்களில் அடைபட்டு தவிக்கும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் விதமாக,வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து முகாம்களும் திறந்த முகாம்களாக்க மாற்றப்படும் என அதிபர் ராகபக்சவின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதிபர் ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பசில் தெரிவித்தார்.
செட்டிக்குளத்திற்கு வந்த செய்த பசில்,அமைச்சர்களான ரிசாத் பதியூதீன், பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரஸ்ரீ ஆகியோர் இராமநாதன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.
இதனையடுத்து பசில் ராஜபக்ச கூறியதாவது :
"2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நடைமுறையிலுள்ள அனைத்து நலன்புரி நிவாரணக் கிராமங்களிலுமுள்ள மக்கள் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படுவர்கள்.அத்துடன், டிசம்பர் மாதம் முதலாம் தேதி முதல் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக எவ்வித கெடுபிடிகளுமின்றி நடமாடும் வகையில் அவை திறந்த முகாம்களாக மாற்றப்படும்.
தற்போது மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, 50 ஆயிரமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படும்.
நிவாரணக் கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களின் தொகை இன்று 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது.