தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » ஆப்கான்தான் உலகிலேயே பிறக்க தகுதியற்ற பயங்கரமான நாடு : ஐ.நா. (Afghanistan is world's most dangerous place to be born in: UN)
Feedback Print Bookmark and Share
 
ஆப்கானிஸ்தான்தான் உலகிலேயே பிறக்க தகுதியற்ற மிகப்பயங்கரமான நாடாக உள்ளது என ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா. வின் குழந்தைகள் நிதியமைப்பான 'யுனிசெப்' வெளியிட்டுள்ள தனது ஆண்டறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஆப்கானிஸ்தான் மிக மோசமான நாடாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான்தான் உலகிலேயே மிக அதிக அளவில் பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படும் நாடாகவும் திகழ்கிறது.1000 பேரில் 257 பெண் குழந்தைகள் இறந்து விடுகின்றனர்.

மேலும் ஆப்கான் மக்களில் 70 விழுக்காட்டினர் சுத்தமான குடி நீர் கிடைக்காமல் இருக்கின்றனர் என்று மேற்கூறிய அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தெற்காசியவுக்கான 'யுன்செப்'பிராந்திய இயக்குனர் டேனியல் டூலி தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்