அமெரிக்காவில் டெக்சாசில் ராணுவ பயிற்சி முகாமில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 பேரின் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
19 வய்து முதல் 62 வயது வரை உள்ளவர்களே இந்த கொடுமையான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, அதில் ஒருவர் லெப்டினன்ட் கொலோனல் எனவும் தெரிவித்துள்ளது.
மற்ற 5 பேரும் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவை புரிபவர்கள் என்றும் தெரிகிறது.
இதில் முக்கியக் குற்றவாளியான ஹஸன் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.