பாக். பெண்கள் பள்ளி மீது குண்டு வீச்சு : ஆசிர்யர்கள், மாணவர்கள் காயம்
குவேட்டா , சனி, 7 நவம்பர் 2009( 18:32 IST )
தென்மேற்கு பாகிஸ்தானிலுள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காயமடைந்தனர்.
ஈரான் மற்றும் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துளள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவேட்டாவில் அரசு பெண்கள் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த பள்ளிக்குள் இன்று காலை திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சிலர்,தாங்கள் வைத்திருந்த கையெறி குண்டுகளை ஆசிரியர்கள் அறை மீதும்,வகுப்பறை மீதும் வீசிவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் சில மாணவர்கள் காயமடைந்ததாக காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.