மும்பை தாக்குதல் வழக்கு : பாக். நீதிமன்றம் ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத் , சனி, 7 நவம்பர் 2009( 17:24 IST )
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடையதாக கருதப்ப்படும் சந்தேக குற்றவாளிகள் ஏழு பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,குற்றம்சாற்றப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வாதம் நடைபெற்றது.
வாதம் முடிவடைந்த பின்னர்,இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி மாலிக் முகமத் அக்ரம்.
அடுத்த வார விசாரணையின்போது குற்றம் சாற்றப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தனது முடிவை நீதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.