ஆஸ்ட்ரேலியாவில் வெள்ளம் பாதித்த பகுதிக்ளை இயற்கை பேரிடருக்கு உள்ளான இடமாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சிட்னி மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மிகுந்த பாதிப்புக்குள்ளான இடங்களில் வசித்து வந்த சுமார் 5,000 பேர் பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய அவசரகால சேவை துறை அமைச்சர் ஸ்டீவ் வான் தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களில் மட்டும் 500 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும்,இது இந்த ஆண்டில் ஏற்பட்ட ஐந்தாவது மிகப்பெரிய வெள்ளம் என்றும் கூறிய வான்,வெள்ளம் பாதித்த பகுதிகள் இயற்கை பேரிடருக்கு உள்ளான இடமாக அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.