தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » சரத் பொன்சேகாவை யு.எஸ்.சில் சந்தித்தார் எம்.கே.நாராயணன் ?
Feedback Print Bookmark and Share
 
இலங்கைக்கான இந்தியாவின் தொடரும் முட்டுக்கொடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக போர் குற்றங்கள் குறித்த அமெரிக்க விசாரணையிலிருந்து நழுவிய இலங்கை கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவை,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் வாஷிங்டனில் சந்தித்துப் பேசியதா தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அயலுறவுத் துறை உதவி அமைச்சர் ராபர்ட் ஓ பிளேக்கைச் சந்திக் இருந்த போதிலும், பிளேக் உடல் நலம் குன்றியிருந்ததால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.

அதேவேளை, சரத் பொன்சேகா அதிகாரப்பூர்வ பணிகளுக்கு அப்பால் சந்திக்கும் நபர்கள் குறித்து, கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வு அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.அவர்களின் வழங்கிய தகவல்கள் அடிப்படையில் இச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் எவ்வாறன பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது என இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை.அத்துடன் இந்தியாவும் இது குறித்து மௌனமாக இருந்து வருகிறது.

போர் குற்றம் தொடர்பாக பொன்சேகா மீதான அமெரிக்க விசாரணையின் பிடி இறுகியபோது,ராஜ பக்ச தூதர்கள் டெல்லி வந்தி மேற்கொண்ட முயற்சி காரணமாகவே இந்தியா இதில் தலையிட்டு அவர் விசாரணையில் சிக்காமல் இருக்க உதவியதாக முன்னர் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்