டாக்கா : அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த சதி ; 3 பேர் கைது
டாக்கா, வெள்ளி, 6 நவம்பர் 2009( 18:48 IST )
வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஹூஜி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் துறைமுக நகரான சிட்டாகாங் என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இரண்டு பேர் லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,மற்றொருவர் ஹியூஜி இயக்கத்தைச் சேர்ந்தவர்க்ள் என்றும் தெரிய வந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாற்றின் பேரில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ - யினால் அண்மையில் கைது செய்யப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மற்றும் கனடவைச் சேர்ந்த ஹுசேன் ராணா ஆகிய தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மேற்கூறிய மூவரும் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல் துறையினர் தெரிவித்தனர்.