சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்ட்ரேலியா செல்ல முயன்ற 78 அகதிகளையும் இன்றைக்குள் அகற்ற வேண்டும் என்ற காலக்கெடுவை இந்தோனேஷியா மேலும் நீட்டித்துள்ளது.
மேலும் அடுத்த வாரம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ருட் மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி சுடிலோ பம்பாங் இருவரும் சந்தித்து பேசவுள்ளனர்.அப்பேச்சின்போது அகதிகள் விவகாரத்தைக் கையாள்வது குறித்த ஒரு உடன்படிக்கையை இருவரும் திட்டமிடவுள்ளனர்.
இந்தோனேசியாவிலுள்ள இலங்கையர் விவகாரம் குறித்து இலங்கை அரசும் தலையிட்டு சிக்கலைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாடு கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.