தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » இந்தியா - நேபாளம் உள்துறை செயலர்கள் பேச்சு தொடங்கியது (India, Nepal open Home Secy-level talks)
Feedback Print Bookmark and Share
 
இந்தியா - நேபாளம் இடையே உள்துறை செயலர்கள் மட்டத்திலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை காத்மாண்டுவில் இன்று தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை நேற்று மாலையே காத்மாண்டு வந்திறங்கினார்.இந்நிலையில் பிள்ளை மற்றும் நேபாள உள்துறை செயலர் கோவிந்தா குஸும் ஆகியோருக்கிடையே இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் எல்லை பாதுகாப்பு மற்றும் நிர்வாக யுக்திகளை வகுப்பது மற்றும் குற்றவாளிகளை நாடு கடத்துதல் போன்றவை குறித்து இரு தரப்புக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நேபாளத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோவிந்தாவை,பிள்ளை கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்