பாக். எல்லையில் நுழைந்ததாக 13 இந்திய மீனவர்கள் கைது
இஸ்லாமாபாத் , வெள்ளி, 6 நவம்பர் 2009( 15:52 IST )
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாக இந்திய மீனவர்கள் 13 பேரை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களிடமும் அவர்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் குறித்தும்,பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அவர்கள் வந்த நோக்கம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவும்,பாகிஸ்தானும் தங்களது கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாக கூறி பரஸ்பரம் இரு நாட்டு மீனவர்களை கடந்த காலங்களில் கைது செய்து வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.