தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » இந்திய நலனுக்கு பாதிப்பு ஏற்படும் எதையும் செய்யமாட்டோம் : சீனா உறுதி (We won't do anything to damage other nations' interests: China)
Feedback Print Bookmark and Share
 
மற்ற நாடுகளின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் எதையும் செய்யமாட்டோம் என இந்தியாவுக்கு சீனா உறுதியளித்துள்ளது.

பிரம்மபுத்திரா நதியின் மீது திபெத்தில் சீனா அணை கட்டி வருவதாக வெளியான செய்திக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவே அந்நாடு இந்த உறுதியை அளித்துள்ளது.

தலைநகர் பீஜிங்கில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த சீன அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் மா ஷாக்ஸு,சீனா ஒரு பொறுப்புள்ள நாடு என்றும்,மற்றவர்களின் நலன்களை பாதிக்கக்கூடிய எந்த செயலையும் செய்யாது என்றும் கூறினார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ்,பிரம்மபுத்திரா நதியின் மீது சீனா அணைக் கட்டி வரும் பிரச்னை குறித்து அந்நாட்டிடம் இந்தியா பல முறை மீண்டும் மீண்டும் எழுப்பி வருவதாகவும்,ஆனால் அந்நாடு அவ்வாறு அணை ஏதும் கட்டி வரவில்லை என்று மறுத்துவருவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்