பாக். : அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத் , வியாழன், 5 நவம்பர் 2009( 17:49 IST )
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ள தாலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள நாரக் கிராமத்தில் உள்ள தாலிபான்கள் தங்கியிருந்த ஒரு வீட்டை குறிவைத்து,இன்று அதிகாலை 1.30 மணியளவில்,அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் 3 தீவிரவாதிகள் காயமடைநததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தீவிரவாதிகளைப் பற்றிய அடையாளங்கள் ஏதும் தெரியவரவில்லை.