தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » மருத்துவ சிகிச்சைக் கட்டணங்களை கட்ட திணறும் அமெரிக்கர்கள் (US lags behind other rich nations in healthcare: Survey)
Feedback Print Bookmark and Share
 
மற்ற வளர்ந்த நாடுகளிலுள்ளவர்களைவிட அமெரிக்கர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை கட்ட திணறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

11 வளர்ந்த நாடுகளில் உள்ள 10,000 க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்,அமெரிக்காவில் உள்ள 58 விழுக்காடு டாக்டர்கள்,தங்களிடம் வரும் நோயாளிகள் தங்களது மருத்துவ சிகிச்சை பில் கட்டணத்தைக் கட்ட அடிக்கடி திணறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலவீனமாக இருப்பதே,மிக அதிக கட்டணத்தில் தரம் குறைந்த மருத்துவ சிகிச்சை பெறும் நிலையும்,இந்த அளவு சிரமத்தை சந்திக்க வேண்டியதும் இருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட சர்வதேச சுகாதாரக் கொள்கைக்கான காமன்வெல்த் நிதியத்தின் தலைவர் கரென் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்