இஸ்லாமாபாத் , வியாழன், 5 நவம்பர் 2009( 16:17 IST )
பாகிஸ்தானின பழங்குடியின பகுதியான கைபர் பிராந்தியத்தில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர்.
கைபர் பகுதியில் உள்ள இகா ஹெல் என்ற இடத்தில் இரண்டடுக்கு மாடி கொண்ட பெண்கள் பள்ளி ஒன்று இயங்கி வந்தது.
இந்நிலையில்,அந்த பள்ளியின் மீது தீவிரவாதிகள் இன்று குண்டு வீசி தாக்கினர்.சுமார் 25 முதல் 30 கிலோ வரையிலான எடை கொண்ட வெடிமருந்துகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் இந்த பள்ளியில் மொத்தமுள்ள 26 வகுப்பறைகளில் 8 வகுப்பறைகள் முற்றிலும் அழிந்துபோனதாகவும்,அதே சமயம் ஆட்களுக்கு உயிர்சேதமோ அல்லது காயமோ எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கும் தீவிரவாதிகள்,கடந்த இரண்டாடுகளில் வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளை அழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.