தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » சவூதியில் இந்தியர் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை
Feedback Print Bookmark and Share
 
இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியரான முகமத் பார்மில், இலங்கை நாட்டைச் சேர்ந்த பன்டர் நிக்கார் மற்றும் ஹாலீமா அபூபக்கர் ஆகியோருக்கு
வாளால் தலையை கொய்து இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஹாலிமா பெண் ஆவார்.

சவூதி அரேபிய பெண் ஒருவரைக் கொலை செய்து அவரது ஆபரணங்களைத் திருடிய குற்றத்திற்காக இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இந்த வருடத்தில் மட்டும் 59 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடத்தில் 109 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு, கொலை, ஆயுத முனை கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்