தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » பான் கி - மூன் ஆப்கான் வருகை
Feedback Print Bookmark and Share
 
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி - மூன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயை சந்தித்துப் பேசுவதற்காக அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

காபூலில் உள்ள ஐ.நா. அலுவல்கத்தில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் சர்வதேச வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்,பான் கி - மூன் ஆப்கான் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காபூல் வந்துள்ள பான் கி - மூன்,ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாய்,முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சரும்,அதிபர் தேர்தலில் கர்சாயை எதிர்த்து போட்டியிட்டவருமான அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளார்.

அப்போது ஆப்கானில் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட ஐ.நா. வின் ஆதரவு நீடிக்கும் என்பதற்கான வாக்குறுதியை மேற்கூறிய இரு தலைவர்களிடமும் அவர் அளிப்பார் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்