தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » திருப்பி அனுப்பினால் தற்கொலை : இலங்கை அகதிகள் எச்சரிக்கை
Feedback Print Bookmark and Share
 
தங்களை இந்தோனேஷியாவுக்கு திருப்பி அனுப்பினால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 78 இலங்கை அகதிகள் ஒசானிக் வைக்கிங் என்ற கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஆஸ்ட்ரேலியா செல்லும் வழியில் இந்தோனேஷிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந்நிலையில், இன்றைய தினம் இவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆஸ்ட்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளது.அந்த பேட்டியின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

தாங்கள் ஏற்கனவே பல காலம் இந்தோனேஷியாவில் இருந்தகாகக் குறிப்பிடும் அகதிகள், அங்கு திரும்பிச் செல்வதை விட உயிரை மாய்ப்பதே மேல் எனத் தெரிவித்துள்ளனர். 9 மாதக் குழந்தை ஒன்றும் இக்கப்பலில் இருப்பதால் அக் குழந்தைக்கு போதியளவு பால் பவுடர் கூட இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்ட்ரேலிய அரசாங்கம் இந்த இலங்கை அகதிகளை ஏற்க மறுத்துள்ள நிலையில், இவர்களை ஆஸ்ட்ரேலிய தொலைக்காட்சியும், வானொலிகளும் பேட்டி கண்டு, இவர்கள் நிலையை எடுத்துரைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 பெண்கள் மற்றும் 5 சிறுவர்களும் இக் கப்பலில் மாதக்கணக்காக தங்கியிருக்கின்றனர்.இந்தோனேஷியா இவர்களை தனது நாட்டிற்குள் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளபோதும், அங்கு அடிக்கடி ஏற்படும் எரிமலை வெடிப்பு, நில நடுக்கம் , மற்றும் சுனாமி போன்ற உபாதைகள் நிறைந்த நாடாகவே இது இன்னமும் உள்ளது.

இங்கு சென்று வாழ்க்கை நடத்துவது தற்கொலைக்கு சமமானது என்பதை யாவரும் அறிவர்.விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்க ஆஸ்ட்ரேலிய அரசை சர்வதேச சமூகம் வற்புறுத்தவேண்டும் என இலங்கை அகதிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்