தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » முகாமிலிருந்து 42,000 தமிழர்கள் விடுவிப்பு : இலங்கை அரசு
Feedback Print Bookmark and Share
 
அகதிகள் முகாமிலிருந்து 42 ஆயிரம் தமிழர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 42 ஆயிரம் பேரை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கான ஆரம்ப வைபவங்கள் வியாழனன்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றன.

சுமார் 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 685 தமிழர்கள்,நேற்று ஒரே நாளில் அகதிகள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வவுனியாவுக்கு 2,583 குடும்பங்களைச் சேர்ந்த 8,643 தமிழர்களும், மன்னாருக்கு 2,644 குடும்பங்களைச் சேர்ந்த 6,631 தமிழ் அகதிகளும், முல்லைத் தீவுக்கு 4,415 குடும்பங்களை சேர்ந்த 16,394 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2,453 குடும்பங்களைச் சேர்ந்த 10,017 தமிழர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 41,685 தமிழர்களுக்கும் இலங்கை பண மதிப்பில் தலா 5 ஆயிரம் ரூபாயும், 20 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி சேமிப்பு கணக்கு புத்தகமும், 6 மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்களும், அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள கூடாரம் கட்டும் சாதனங்களும், போர்வைகளும் வழங்கப்பட்டன.

பின்னர், தமிழர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

முல்லைத் தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முதலில் பல்வேறு பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தங்களது வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் முல்லைத் தீவு மாவட்ட ஆட்சியாளர் எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

இதேபோல் வவுனியா முகாமில் இருந்து மட்டக் களப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட 298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு நடந்த விழாவில் இலங்கை சமூக நலத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, மீள் குடியேற்ற உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை தமிழ் அகதிகளிடம் வழங்கினார்.

இன்னும் ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு லட்சம் பேரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்