சிட்னி: ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் தாங்களாகவே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஆகவே இந்திய மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்,
தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பிரபல எழுத்தாளர் பரூக் தோன்டி கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட், "ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அனைவரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இந்திய மாணவர்கள் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று கூறினார்.