முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > கருப்பாக இருப்பதை விரும்பாத மைக்கேல் ஜாக்சன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கருப்பாக இருப்பதை விரும்பாத மைக்கேல் ஜாக்சன்
மைக்கேல் ஜாக்சன் தான் கருப்பாக இருப்பதை விரும்பாமல் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தனது தோலின் நிறத்தை மாற்றிக் கொண்டதாகவும் ஜாக்சனின் நெருங்கிய நண்பர் குயின்சி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜாக்சனின் நெருங்கிய நணபரும், அவரது பிரபலமான " பேட் " மற்றும் " த்ரில்லர் " ஆகிய இசை தொகுப்புகளை தயாரித்தவருமான குயின்சி ஜோன்ஸ், இது குறித்து மேலும் கூறுகையில், தாம் கருப்பாக இருப்பதை விரும்பாததாலேயே ஜாக்சன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொண்டதாகவும், ஆனால் தமது தோலின் நிறம் வெண்மையாக மாறியதற்கு " வெண் குஷ்டம் " நோயே காரணம் என்று அதன் மீது பழியை போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாக்சன் தனது தோற்றத்தை ஏன் ஒரு பிரச்னையாக கருதினார் என்று தமக்கு புரியவில்லை என்றும் ஜோன்ஸ் தெரிவித்ததாக லண்டனைச் சேர்ந்த " சன் " இணைய தளம் தெரிவித்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஈரானில் 2 கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
பாக். கில் இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 26 பேர் பலி
பாம்பை விழுங்கியது தவளை : சீனாவில் அதிசயம்
விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் தொடக்கம்
ஒபாமாவுக்கு சம்பளம் எவ்வளவு ?
ஆப்கான் எல்லைக்கு பாகிஸ்தான் சீல்