முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > ஈரானில் 2 கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரானில் 2 கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
ஈரானில் கொலைக் குற்றவாளிகள் இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஈரானில் கொலை, கற்பழிப்பு, கொள்ளை , போதை மருந்து கடத்தல் மற்றும் மோசடி போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஷிராஸ் நகரில் உள்ள சிறையில், கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெஹ்ரானிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனையை சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் ஈரானில் இதுவரை 141 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பாக். கில் இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 26 பேர் பலி
பாம்பை விழுங்கியது தவளை : சீனாவில் அதிசயம்
விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் தொடக்கம்
ஒபாமாவுக்கு சம்பளம் எவ்வளவு ?
ஆப்கான் எல்லைக்கு பாகிஸ்தான் சீல்
முகாம்களை நிரந்தரமாக்க இலங்கை அரசு இரகசிய திட்டம்?