முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > பாக். கில் இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 26 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாக். கில் இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 26 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 26 பேர் பலியாகினர்.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கைபர் பழங்குடியினப் பகுதியையொட்டிய எல்லைப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளானது ரஷ்ய தயாரிப்பான எம்ஐ - 17 ரக ஹெலிகாப்டர் என்றும் , தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்த அதிகாரி கூறியபோதிலும் , தாங்கள்தான் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.

தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே தாங்கள் இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஊடகம் ஒன்றை தொடர்பு கொண்டு தாலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் தொடக்கம்
ஒபாமாவுக்கு சம்பளம் எவ்வளவு ?
ஆப்கான் எல்லைக்கு பாகிஸ்தான் சீல்
முகாம்களை நிரந்தரமாக்க இலங்கை அரசு இரகசிய திட்டம்?
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சா‌ற்று